அண்ணிக்கு பாலியல் தொல்லை: தட்டி கேட்ட கொழுந்தன் வெட்டி கொலை

Report Print Raju Raju in இந்தியா

அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தட்டி கேட்ட கொழுந்தனை, இருவர் வெட்டி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் நெரு என்கிற சீனிவாசன். இவர் தனது அண்ணன் ஸ்டீபன் வீட்டில் தங்கி தினமும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சாம்சன் மற்றும் அவரது சகோதரர் மார்டின் ஆகியோர் சேர்ந்து ஸ்டீபனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக நெரு அவர்களிடம் தட்டி கேட்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இது குறித்து நெரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சாம்சனும், மார்டினும் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியில் வந்த நெருவை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் நெரு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தலைமறைவாக உள்ள சாம்சன் மற்றும் மார்டினை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments