ஆற்றை கடக்க கயிற்றின் மீது நடந்து செல்லும் கிராம மக்கள்: திக் திக் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

பாலம் இல்லாததால் ஆற்றை கடக்க கிராம மக்கள் தினமும் கயிற்றின் மீது உயிரை பணயம் வைத்து நடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மசெனார் கிராமத்தில் ஆறு ஒன்று அமைந்துள்ளது.

ஆனால், ஆற்றின் மேல் பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பக்கத்து ஊர்களுக்கு செல்ல கயிற்றின் மூலம் ஆற்றைக் கடந்து பல வருடங்களாக சென்று வருகின்றனர்.

பெண்கள் பாரமான பொருட்களை தூக்கிக்கொண்டு இந்த கயிற்றில் ஆற்றைக் கடக்கின்றனர்.

இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை உயிரை பணயம் வைத்தே ஆற்றை கடக்கிறார்கள்.

இந்த ஆபத்தான பயணம் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments