கழிவறையில் இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை: அடுத்து நிகழ்ந்த பயங்கரம்

Report Print Raju Raju in இந்தியா

கழிவறையில் இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், கழிவறையின் கோப்பையில் விழுந்ததால் தலையில் அடிபட்டு குழந்தை பரிதாபமாக இறந்தது.

தமிழ்நாட்டின் கோவையில் உள்ள பீளமேடு புறநகரை சேர்ந்தவர் லிங்கதுரை (30). இவர் மனைவி ஈஸ்வரி (25) இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், ஈஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவரை ஓரிரு நாட்களில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்க லிங்கதுரை முடிவு செய்து இருந்தார்.

இதற்கிடையில், ஈஸ்வரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வழக்கமாக வரக்கூடிய வயிற்று வலி என நினைத்த அவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அங்கே ஈஸ்வரிக்கு திடீரென ஆண் குழந்தை பிறந்தது. அவரின் அலறல் சத்தத்தை கேட்ட குடும்பத்தார் கழிவறைக்கு ஓடி சென்று பார்த்தனர்.

அங்கே, ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையிலும், கழிவறைக்குள் இருந்த கோப்பைக்குள் பச்சிளம் குழந்தை தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையிலும் கிடந்தது.

உடனே ஈஸ்வரி மற்றும் குழந்தையை மீட்ட குடும்பத்தார் அவர்களை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள்.

ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டது. ஈஸ்வரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில், நிறைமாத கர்ப்பிணி பெண்கள் கழிவறைக்கு செல்லும் போது துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments