35 பவுன் நகை, 7 லட்சம் பணம்: தொழில் அதிபரிடம் கைவரிசையை காட்டிய நபர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சேலம் மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைகாரர்கள் 35 பவுன் நகை, ரூ.7 லட்சம் மற்றும் 7 லட்சம் மதிப்புள்ள காரை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பழனிவேல் என்பவரது வீட்டுக்குள் நேற்று இரவு நுழைந்த 3 திருடர்கள், கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த அவரது மனைவியையும் இவரையும் கட்டி வைத்துள்ளனர்.

அதன்பின்னர், பீரோவில் இருந்த 25 பவுன் நகை, பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலி மற்றும் ரூ.7 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை எடுத்துக்கொண்டு நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments