பழங்குடியினரின் நிர்வாண காட்சிகளை யூ டியூப் நீக்க கோரிக்கை

Report Print Raju Raju in இந்தியா

அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களை காட்டும் வீடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணையதளத்துக்கு இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

அந்தமானில் ஜாரவா பழங்குடி இனமக்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். வெளியுலக தொடர்புகள் இன்றி வாழும் அவர்கள் பெரும்பாலும் நிர்வாணமாகவே இருப்பார்கள்.

அவர்கள் நடமாடும் வீடியோக்கள் பல யூ டியூப் இணையதளத்தில் உள்ளன. இந்த வீடியோக்களை யூ டியூப் நிறுவனம் நீக்க வேண்டும் என இந்திய அரசு கூறியுள்ளது.

மேலும், ஜாரவா இனத்தவர்களின் ஆட்சேபத்துக்குரிய வீடியா குறித்த விவகாரத்தை தேசிய பழங்குடியினர் ஆணையம் (என்சிஎஸ்டி) தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுள்ளது.

அவர்களை யாரும் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க கூடாது என அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், மக்களுக்கும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் சிலர் பதிவேற்றுகின்றனர்

ஜாரவா இனத்தினர் வசிக்கும் இடங்களில் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கூடாது எனவும் எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறிய பழங்குடியினர் ஆணைய செயலர் ராகவ் சந்திரா, விடியோ காட்சியில் பாதுகாக்கப்பட்ட பழங்குடியினரை நிர்வாண கோலத்தில் சுற்றித்திரிந்து விளையாடுவது போல காண்பித்துள்ளனர்.

அந்த காட்சிகளைப் பார்க்கும்போது உரிய அனுமதியின்றி அவை எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது என்று ராகவ் கூறியுள்ளார்.

ஜாரவாக்களை பார்பதற்காக பலர் செல்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ராகவ், இந்த விடயத்தில் கடுமையான விதிமுறைகளை வகுத்து, இனி இப்படி நடக்காமல் தடுக்க முயன்று வருவதாக கூறியுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தவர்களை அவர்களாகவே வாழ விடலாமா அல்லது மெதுவாக அவர்களை பொதுப்பகுதிக்கு ஒருங்கிணைக்கலாமா என்பது பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் சுமார் 28,077 பழங்குடியினர் உள்ளனர். இதில் ஐந்து பழங்குடியினத்தவர்கள் 500-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments