நடிகர் திலீப் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

Report Print Raju Raju in இந்தியா

நடிகை பாவனா குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளை கூறியதாக நடிகர் திலீப் உட்பட 4 பேர் மீது மகளிர் நல ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17ஆம் திகதி இரவு காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாவனா கடத்தல் வழக்கில் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாக நடிகர் திலீப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனிடையில், பாவனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக திலீப், நடிகர் சலீம் குமார் உள்பட 4 பேர் மீது கேரள மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் திலீப் உள்ளிட்டோர் மீது மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான தகுந்த ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments