10 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: சாமியார் கைது

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, சாமியார் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புது டெல்லி அருகேயுள்ள ஜெய்த்பூர் அருகே குடிசை ஒன்றில் வசித்து வருபவர் டோங்கி பாபா. இவர் தன்னை சாமியார்

என்று அழைத்துக்கொண்டு, பூஜைகளும் செய்து வந்தார். அவரை நம்பி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது குடிசைக்கு சென்று பூஜைகளில் பங்கேற்று வந்தனர். அங்கு செல்லும் ஒரு பெண், தனது பத்து வயது மகளையும் அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து அந்தச் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று டோங்கி பாபா, கடந்த நான்கைந்து மாதங்களாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ’இதை வெளியே சொல்லக் கூடாது, சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று அந்த பாபா மிரட்டியுள்ளான்.

ஆனால் அந்த சிறுமி தனது அம்மாவிடம் இந்தச் சம்பவத்தைத் தெரிவித்து அழுதுள்ளது. இதையடுத்து பதறிய அந்த அம்மா, உடனடியாக பொலிசில் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் அந்த சாமியாரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments