சென்னையில் பிரபல விளம்பர மொடல் மாயம்: கடத்தலா? கொலையா?

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையில் விளம்பர மொடலும், கதாசிரியையுமான இளம் பெண்ணைக் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகள் ஞானம். சென்னை கேகே நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து டிவி சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதி வந்ததுடன் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்துள்ளார். இதுதவிர விளம்பரப் படங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி, கடந்த 26-ம் திகதியன்று காலையில் தனது கருப்பு நிற ஹொண்டா ஆக்டிவா வாகனத்தில் வெளியில் சென்ற ஞானம், இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் மகிஜா என்பவர் கேகே நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஞானத்தை யாராவது மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டார்களா? அவர் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. கேகே நகர் பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments