இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 சிறுவர்கள்: வீடியோ எடுத்த கொடூரம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பெண்களை 14 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூரில் 2 பெண்கள் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த 14 சிறுவர்கள் அந்த இருவரையும் கேலி செய்துள்ளனர்.

பின்னர் இரண்டு பெண்களின் கையை பிடித்து இழுத்தும், அவர்களின் உடலை சீண்டியும் தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தங்களை விட்டு விடும்படி சிறுவர்களிடம் கண்ணீருடன் கெஞ்சி கேட்டு கொண்டிருந்தனர்.

மேலும், இதை அங்கிருந்த 14 பேரில் ஒருவன் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளான்.

இது வீடியோ வைரலானதை தொடர்ந்து பொலிசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments