எடப்பாடி அரசு விரைவில் கலைக்கப்படும்: உறுதியாக கூறும் அதிமுக எம்.பி

Report Print Raju Raju in இந்தியா

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு விடும் என அதிமுக-வின் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.பி கூறியுள்ளார்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்குட்டுவன், இவர் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார்.

செங்குட்டுவன் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா தலைமையில் பொற்கால ஆட்சி நடந்தது.

அதன் பின்னர் ஓ.பி.எஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி நடைபெற்றது, தற்போது நடக்கும் ஆட்சி கூவத்தூர் ஆட்சி.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. சசிகலாவும், திமுக-வினரும் பயன் பெறவே டாஸ்மாக் கடைகள் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சி கலையும் எனவும், எம்எல்ஏ- க்களில் பலர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments