எனது ஆசான்: கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்

Report Print Printha in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாளையொட்டி, நடிகர் கமல் தனது வீடியோ பதிவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், கருணாநிதியின் வசனம் என்பது நாடக, சினிமா துறைக்கு வரும் கலைஞர்களுக்கு அனுமதிச் சீட்டாகும்.

நீச்சல் தெரியுமா? என்றால் நீரில் குதிச்சு காட்டுவது போல், நடிக்கத் தெரியுமா? என்றால் கருணாநிதி வசனத்தை சிவாஜி போல் பேசினால் போதும் அந்த கலைஞன் நடிக்கத் தெரிந்தவர் என்று அங்கீகரிக்கப்படுவார்.

சட்டம் என் கையில் படத்தின் 100-ஆவது நாள் விழாவின் போது, கருணாநிதியுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

முத்தமிழ் அறிஞர்கள் மேடையில் ஒருமுறை பேசும் போது, கருணாநிதி, சிவாஜி கணேசன், கண்ணதாசன் ஆகிய மூன்று பேரை குறிப்பிட்டு தனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்கள் என்றேன்.

அதனால் மறுநாள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட எம்ஜிஆர் பாராட்டு தெரிவித்தார்.

கருணாநிதி மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, அற்புதமான கதாசிரியர். தசாவதாரம் படத்தை பாராட்டி என் கன்னத்தை கிள்ளியவர் கருணாநிதி.

எனது படங்களை நான் அவருக்கு பிரிவீயூ ஷோ போட்டு காட்ட மறந்து விட்டாலும் அவர் நினைவுப்படுத்துவார்.

ஆனால் வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, மனம் இருந்தால் போதும், கருணாநிதியின் வசனத்தை பேசுபவன், நடிப்பதற்கான தகுதியைப் பெற்றவன் நான்.

அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவர் எவ்வளவு இளமையில் வந்திருக்க வேண்டும்.

அதற்காக அவர் எத்தனை முதுமைகளை சந்தித்திருப்பார்? என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments