நரபலிக்காக கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தை?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் நரபலிக்காக ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த தம்பதி சத்யராஜ்- புவனேஸ்வரி.

இவர்கள் தங்களுடைய ஒரு வயது மகனுடன் இரு நாட்களுக்கு முன் பனப்பாக்கம் அருகே உள்ள மதகு காத்த அம்மன் கோவிலுக்கு அமாவாசை பூஜைக்காக சென்றுள்ளனர்.

இரவு பூஜை முடிந்தவுடன் கோவிலில் தங்கியுள்ளனர், இரவு 11 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் அரைமணிநேரம் கழித்து மின்சாரம் வந்தவுடன் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.

எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் பாணாவரம் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையில், மர்ம நபர்கள் சிலர் மின்சாரத்தை துண்டித்து குழந்தையை காரில் கடத்தியது தெரியவந்தது.

நரபலிக்காக குழந்தையை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments