தம்பிகளுக்கு மனைவியை விருந்தாக்கி வேடிக்கை பார்த்த கணவர்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் நபர் ஒருவர் மனைவியை பழிதீர்க்க தனது மூன்று தம்பிகளுக்கும் விருந்தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் தஹோட் மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. அபால்ட் கிராமத்தை சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் 19 வயதான மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியின் வீட்டிற்கு சென்ற கணவன் வலுக்கட்டாயமாக அவரை அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவர் ஒரு அறையில் அடைத்துள்ளார். பின்னர், பழிதீர்க்க தனது மூன்று தம்பிகளையும் கற்பழிக்க கட்டளையிட்டுள்ளார்.

அண்ணனின் கட்டளை படி மூன்று தம்பிகளும் அண்ணியை கற்பழித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் கணவனையும், அவரது தம்பிகளில் ஒருவனையும் கைது செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு தம்பிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments