நம்பிய கணவரை ஏமாற்றிய மனைவி: வீட்டிற்கு வந்து செய்த செயல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கள்ளக்காதல் பிரச்னை காரணமாக கணவனின் மர்ம உறுப்பை வெட்டிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் அசன்சோல் பகுதியை சேர்ந்த முகம்மது நவுசத்திற்கும், பிகார் மாநிலம் லக்ஷ்மிசராய் பகுதியை சேர்ந்த ருக்பானுவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமான ஒரு மாதத்திலே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவர்களின் குடும்ப வழக்கப்படி திருமணமான 40 நாட்களுக்கு பிறகு பெண்ணை பிறந்த வீட்டிற்கு கூட்டிச்சென்று பின்னர் அழைத்து வர வேண்டும். ஆனால் தனது வீட்டிற்கு சென்ற ருக்பானு திரும்ப வர மறுத்துவிட்டார்.

அதன்பின்னர் அவரை சமரசம் செய்து நவுசத் பேசி ரயிலில் அழைத்து வரும் போது ஜார்கண்ட் மாநிலம் ரயில் நிலையத்தில் ருக்பானு மாயமாகியுள்ளார்.

சில தினங்களுக்கு பிறகு கணவரின் வீட்டிற்கு மீண்டும் வந்தார் ருக்பானு. இந்த இடைப்பட்ட நாளில் பெற்றோருடன் தான் இருந்திருப்பார் என்று நம்பியிருந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் இருந்தது தெரியவந்தது. இதனால் மீண்டும் இருவருக்கும் பிரச்சனை வளர்ந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று ருக்பானு நன்கு தூங்கிக்கொண்டிருந்த நவுசத்தின் மர்ம உறுப்பை ரேசர் கொண்டு அறுத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அவர் அறைக்குச் சென்றுள்ளார்.

நவுசத் வலியில் கத்தவும் வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதன் பின்னர் அங்கு வந்த ருக்பானுவிடம் என்ன நடந்தது என்று கேட்க தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ருக்பானு எந்த பதட்டமும் இல்லாமல் இருப்பதை பார்த்த நவுசத்தின் குடும்பத்தினர் இந்த செயலை செய்தது ருக்பானு தான் கண்டறிந்தனர். இது குறித்து நவுசத் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் அதற்குள் ருக்பானு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாகவும், பொலிசார் அவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments