சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி திடீர் மனு

Report Print Arbin Arbin in இந்தியா

25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

கடந்த 1991ஆம் ஆண்டு தமிழகம் வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

இதையடுத்து கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனிடையே இவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் காரணங்களுக்காகவே தான் இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதாகவும் நளினி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments