ஜோதிடரை நம்பிய இளம் பெண்: பரிகாரம் என்ற பெயரில் பல முறை சீரழித்த பயங்கரம்

Report Print Raju Raju in இந்தியா

பெங்களூரில் இளம் பெண்ணை பரிகாரம் என்ற பெயரில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்த போலி ஜோதிடரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரின் விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவின் மகனுக்கு வலிப்பு நோய் பிரச்சனை உள்ளது.

இந்நிலையில், ஐஸ்வர்யா வீட்டுக்கு ஆதரவற்றோர் அமைப்பு நடத்துவதாக கூறி நன்கொடை பெறுவதற்காக பிரசன்ன குமார் (31) என்னும் நபர் வந்துள்ளார்.

அவருக்கு 200 ரூபாய் கொடுத்த ஐஸ்வர்யா தனது போன் நம்பரை நன்கொடை ரசீதில் எழுதியுள்ளார்.

பின்னர், அந்த நம்பருக்கு ஒரு நாள் போன் செய்த பிரசன்ன குமார், ஐஸ்வர்யா மகனுக்கு உள்ள வலிப்பு நோய் பற்றி எப்படியோ தெரிந்து கொண்டு அதை சரி செய்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, தனது மகனின் நோய் பற்றி பிரசன்ன குமார் தெரிந்து வைத்துள்ளதை பார்த்து ஆச்சரியமடைந்த ஐஸ்வர்யா அவர் சக்தி வாய்ந்த ஜோதிடர் என நம்பியுள்ளார்.

அதன் பின்னர், ஐஸ்வர்யா கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் பூஜை செய்வதாக கூறி பிரசன்ன குமார் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்துள்ளார்.

அப்படி ஒரு நாள் பிரசன்ன குமார், அவர் வீட்டுக்கு வரும் போது, போதை பொருள் கலந்த மிட்டாயை ஐஸ்வர்யா வாயில் கட்டாயப்படுத்தி திணித்துள்ளார்.

இதையடுத்து போதை தலைக்கேறி மயக்கமான ஐஸ்வர்யாவை, பிரசன்ன குமார் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் மயக்கம் தெளிந்து ஐஸ்வர்யா இது குறித்து அவரிடம் வாக்குவாதம் செய்ய, பிரசன்ன குமாரோ இது ஒரு வைத்தியம் என கூறியுள்ளார்.

மேலும், தன்னுடன் 7 முறை உறவு கொண்டால் உனது மகன் உடல்நிலை சரியாகிவிடும் எனவும் ஐஸ்வர்யாவிடம், பிரசன்ன குமார் கூறியுள்ளார்.

இதற்கு ஐஸ்வர்யா ஒப்பு கொள்ளாத நிலையில், ஏற்கனவே அவரை நிர்வாணமாக்கி எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டி மீண்டும் அவருடன் பலமுறை உறவு கொண்டுள்ளார்.

இதோடு நிற்காத பிரசன்ன குமார், புகைப்படத்தை காட்டி ஐஸ்வர்யாவிடம் பணம் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கியுள்ளார்.

போலி ஜோதிடரின் மிரட்டலால், ஒரு சமயம் கணவரின் கிரெடிட் கார்ட் மூலம் ஐஸ்வர்யா 20 லட்சம் மதிப்புள்ள பொருளை அவருக்கு கொடுத்துள்ளார்.

பணம் அதிகளவில் குறைந்ததை பார்த்து சந்தேகமடைந்த அவர் கணவர் இது குறித்து மனைவியிடம் கேட்க அவர் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.

பின்னர் இது குறித்து ஐஸ்வர்யாவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் தந்ததையொட்டி பிரசன்ன குமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments