அவங்க தான் என்னை அசிங்கப்படுத்தினாங்க: நடிகர் பாலாஜி வேதனை

Report Print Deepthi Deepthi in இந்தியா

காதல் திருமணம் செய்து கொண்ட நான், எதற்காக ஜாதி பெயரை சொல்லி அவமானப்படுத்த வேண்டும் என நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நேற்று காவல் நிலையம் சென்று புகார் ஒன்றை அளித்தார்.

அதில், எனது கணவர் என்னை ஜாதி பெயரை கூறி கொடுமைபடுத்துகிறார் என்று தெரிவித்திருந்தார், இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தாடி பாலாஜி கூறியதாவது, கணவன் மனைவிக்குள் நடக்கும் சாதாரண பிரச்சனைதான் எங்களுக்குள்ளும் நடந்தது.

காதலிக்கும்போதே ஜாதியை தெரிந்துகொண்டுதான் காதலித்தோம், திருமணமாகி 8 வருடங்கள் ஆனபின்னர் எதற்காக நான் ஜாதி பெயரை வைத்து சண்டையிட வேண்டும்.

நாங்க இப்ப இருக்கிற கொளத்தூர் வீடு, என் மனைவி நித்யாவுக்கு அவங்க அப்பா கொடுத்தது.

பிறகு நானும் நித்யாவும் இருக்கிற நகைகளை எல்லாம் அடமானம் வைத்து, தொலைக்காட்சியின் மூலம் வந்த பணத்தையும் போட்டு அந்த வீட்டுக்கு மேல ரெண்டு அடுக்கு மாடிக் கட்டடம் எழுப்பினோம்.

அதுக்கு பிள்ளையார்சுழி போட்டது என் நண்பன் ஈரோடு மகேஷ்தான். சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சுதானே அப்படிக் கட்டினோம். ஆனா, ஒவ்வொரு கட்டத்துலயும் ‘இது என் வீடு, வீட்டைவிட்டு வெளியே போ!’னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

ஆனாலும் பொறுத்துக்கிட்டேன். இத்தனைக்கும் அது மாமனார் தந்த வீடா இருந்தாலும் அதுக்கு மாசம் 15 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்துட்டிருக்கேன். மனைவியோட செலவுக்குப் பணம் தர்றேன்.

அதுபோக அடமானம் வெச்ச நகைக்கு வட்டி, அவங்க அப்பா வாங்கி தந்த லோனுக்கு வட்டி கட்டுகிறேன்.

இவ்வளவு செய்தும் எனக்கு கெட்டப்பெயர் தான் கிடைத்துள்ளது. பொலிசில் எல்லாம் புகார் கொடுக்க வேண்டாம், நாம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறினேன், ஆனால் அவர் கேட்கவில்லை.

எங்கள் பிரச்சனைகள் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என மனவேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments