அரசுக்கு வீண் செலவு என குறிப்பிட்டு வைகோவை ஜாமீனில் விட்ட நீதிமன்றம்

Report Print Basu in இந்தியா

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ம் திகதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ சரண் அடைந்தார்.

50 நாட்களுக்கு மேலாக சென்னை புழல் சிறையில் இருந்த அவர், தனக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை 4வது முதன்மை அமர்வு நீதிமன்றம், அரசுக்கு தேவையில்லாத செலவு ஆவதால் சொந்த ஜாமீன்ல் வைகோவை விடலாம் என உத்தரவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments