திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த காதலன்: காதலி எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து காதலன் ஏமாற்றியதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவர் மனைவி ஜோஸ்பின்.

இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர், மூத்த மகளின் பெயர் ஜெயதேவி (30).

ஜெயராஜும், ஜோஸ்பினும் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டனர். இதையடுத்து சகோதரிகள் மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஜெயதேவி வசிக்கும் பகுதியில் இருக்கும் கருணாநிதி (34) என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்த இருவரும், பின்னர் தனிமையில் சந்திக்க தொடங்கினார்கள்.

இதனிடையில், ஜெயதேவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய கருணாநிதி அவரிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கருணாநிதியிடம், ஜெயதேவி வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து ஜெயதேவி பொலிசில் புகார் அளித்ததையடுத்து கருணாநிதியிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையில் தனது வாழ்க்கையை எண்ணி மன வேதனையில் இருந்த ஜெயதேவி, நேற்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு போராடிய அவரை மீட்டு அவரின் சகோதரிகள் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஜெயதேவி உயிரிழந்தார்.

பின்னர், ஜெயதேவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார், அவர் இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையில் ஜெயதேவியை ஏமாற்றிய கருணாநிதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் சடலத்தை வாங்க மறுத்து ஜெயதேவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து கருணாநிதியை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments