குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி

Report Print Deepthi Deepthi in இந்தியா

காஞ்சிபுரத்தில் மாடுமேய்க்கும் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் அச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தளி பகுதியில் ஆடு மேய்கும் 14 வயது சிறுமியை அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், முருகதாஸ் ஆகிய இருவரும் பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார், இதை சிறுமியின் உறவினர்கள் வெளியே கூறாமல் மறைத்துள்ளனர்.

இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.

சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் காவல்துறைக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணன் மற்றும் முருகதாஸ் இருவரும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் இருவரையும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments