முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்ச்சிக்கு தடை: மெரினாவில் பொலிசார் குவிப்பு.. 12 பேர் கைது

Report Print Basu in இந்தியா

சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் மெரீனா கடற்கரையில் அதிக அளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை மெரீனா கடற்கரையில் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு பொலிசார் அனுமதி மறுத்து வருகின்றனர்.

தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17 ம் திகதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அஞ்சலி செலுத்த மே 17 என்ற இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை அடுத்து இன்று நினைவேந்தல் கூட்டம் மெரினா கடற்கரையில் நடத்தக்கூடாது என்று பொலிசார் அறிவுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினாவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் பிரபாகரன் உருவம் பதித்த, கருப்பு சட்டை மற்றும் டி-சர்ட்டுகள் அணிந்து வந்த 12 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதனால், மெரினா கடற்கரையில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments