சாமியாரின் மர்ம உறுப்பை வெட்டிய மாணவி: எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பி

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் சாமியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி அவரின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்தது தவறு என காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசிதரூர் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் சாமியார் ஒருவரிடம் சென்ற மாணவியை அவர் பலவந்தமாக பலாத்காரம் செய்தார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவி சாமியாரின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவியின் செயலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர், சாமியாரின் உறுப்பை துண்டித்ததற்கு பதிலாக மாணவி காவல்துறையிடம் சென்று இருக்க வேண்டும்.

இது போன்ற விரைவான தீர்ப்பு அப்போது மன நிறைவை தரலாம். ஆனால் சட்டத்தை கையில் எடுப்பதை விட காவல் துறையிடம் சென்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

தன்னுடைய அனுதாபங்கள் மாணவிக்கு உள்ளது என கூறியுள்ள சசி தரூர், நீதி கிடைக்க வேண்டிய ஒரு சமூகமானது நமக்கு அவசியம் எனவும் ஒவ்வொரு தனிமனிதனும் கத்தியை கையில் எடுக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments