சசிகலாவை சிறையில் சென்று சந்தித்த கருணாஸ்: மனம் உருக பேச்சு

Report Print Raju Raju in இந்தியா

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை, நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் சந்தித்து 40 நிமிடங்கள் வரை பேசியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள், குடும்ப உறவுகள் என வெகு சிலரே சசிகலாவை சிறையில் சென்று எப்போதாவது பார்த்து விட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ், சசிகலாவை நேற்று நேரில் சென்று பார்த்து விட்டு வந்துள்ளார்.

கருணாஸ் சசிகலாவை சந்தித்து 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, அதிமுக கட்சியைப் பற்றி மனம் திறந்து உருகி உருகி சசிகலா பேசியதாக தெரிகிறது.

ஜெயலலிதா வளர்த்த கட்சியை எந்த காரணத்தை கொண்டும் சிதைத்து விடக்கூடாது என்று சசிகலா கருணாஸிடம் கூறியுள்ளார்.

சசிகலாவை சந்தித்து பேசியது மகிழ்ச்சியளிப்பதாக கருணாஸ் கூறியுள்ளார்

இரண்டாக உடைந்துள்ள அதிமுக, மீண்டும் ஒன்றாக இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கருணாஸ் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பற்பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments