நானும் சாகட்டுமா? நந்தினியின் கண்ணீர் பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா

பிரபல நடிகை மைனாவின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டார், இவரது மரணத்துக்கு நந்தினி தான் காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் கார்த்திகேயனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும், பல லட்ச ரூபாய் கையாடல் செய்து விட்டதாகவும் நந்தினி கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள விருகம்பாக்கம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர், இ்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நந்தினி மற்றும் அவரது தந்தை அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் நந்தினி பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் எந்த தவறும் செய்யவில்லை, ஓடி ஒளியவும் விரும்பவில்லை.

சில காரணங்களுக்காக நானும், என் கணவரும் மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்தது உண்மை தான்.

நான் கார்த்திக்குடன் வாழும் வரை, அவருடைய அம்மாவை.. நானும் அம்மா என்றுதான் அழைத்தேன். ஆனால், அவரே இப்போது எனக்கு எதிராகப் பல அவதூறுகளை பரப்புகிறார்.

நான் பலருடன் ஊர் சுற்றுவதாகப் பேசி, என்னை அழ வைத்துப் பார்க்கிறார். கார்த்திக் இறந்தபோது, அவருடைய முகத்தைப் பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை.

பல போராட்டங்களுக்குப் பிறகு, நான் இடுகாட்டில்தான் அவர் முகத்தைப் பார்த்தேன். எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?

அவர்கள் வசிக்கும் வீட்டில் உள்ள பொருட்களும், அட்வான்ஸ் பணமும் என்னுடையது, கார்த்திகே இல்லை என்ற போது இந்த பணம், பொருள் எனக்கு தேவையில்லை.

நான் நல்லவள் என்று யாரிடமும் நற்சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை, கார்த்திக் மன உளைச்சலால்தான் தற்கொலை செய்துகொண்டார். எனக்கும் இப்போது அப்படிப் பல மன உளைச்சல்கள். நானும் சாகட்டுமா? நான் செத்தால், எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடுமா? எனக்கு ஏன் இந்தச் சோதனை?

என்னுடைய அப்பா-அம்மா, தம்பி மூன்று பேரும் எனக்குக் குழந்தைகள். அந்த மூன்று குழந்தைகளையும் இனி நான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்காக இன்னும் சில நாட்கள் உயிரோடு இருக்க வேண்டும். என் தம்பிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்டு, என் அப்பா-அம்மாவின் சில ஆசைகளை நிறைவேற்றி முடித்த பிறகு, கடவுள் என்னை அழைத்துக்கொள்ளட்டும். நான் நிம்மதியாகக் கண் மூடுகிறேன் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments