தேர்தல் ரத்து எதிரொலி: ஆர்.கே நகரில் குடிநீர் நிறுத்தம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் ரத்தானதையடுத்து அந்த தொகுதியில் குடிநீர் விநியோகம் தடாலடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

அதிமுக சார்பில் தினகரனும், ஓபி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆட்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது, இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முன்னதாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆர்.கே. நகருக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது, இதனால் அந்த தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

தற்போது தேர்தல் ரத்தானதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments