வீதிக்கு வந்த சண்டை! வீட்டுக்கு வந்த கணவரை துரத்தியடித்த தீபா

Report Print Raju Raju in இந்தியா

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தன் வீட்டுக்கு வந்த கணவருடன் ஏற்பட்ட மோதலால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரின் அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார்.

எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கிய தீபா அந்த பேரவைக்கு செயலாளராக தன் வீட்டு கார் ஓட்டுனர் ராஜாவை நியமித்தார்.

மேலும் தலைவராக ராஜாவின் மனைவி சரண்யவை நியமித்தார்.

இதற்கு தீபாவின் கணவர் மாதவன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தான் கூறும் நபர்களுக்கே பதவி வழங்க வேண்டும் எனவும் மாதவன் தீபாவிடம் வலியுறுத்தினார்.

இதனை தீபா ஏற்காததால் அவருக்கும், மாதவனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

பின்னர் மாதவன், தீபாவின் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள தீபா வீட்டுக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த மாதவன், தீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் கோபமடைந்த தீபா, தன் கணவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். மேலும், அவரை மீண்டும் வீட்டுக்குள் விட வேண்டாம் என காவலாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தீபா வீட்டு வாசலில் இருந்த மாதவன் - தீபா ஆதரவாளர்களிடையே சண்டை ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இரு தரப்பையும் சமாதனபடுத்தி அனுப்பி வைத்தனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments