அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: இரண்டு இந்தியர்கள் பலி

Report Print Santhan in இந்தியா

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதலி இரண்டு இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஆசின் மாவட்டத்தில் ஐ.எஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான நங்கர்ஹார் பகுதியில் அமெரிக்கா மிகப்பெரிய வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள், அவர்கள் பதுங்கி வாழ பயன்படுத்தப்படும் குகைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ஆப்கான் அரசின் உதவியுடன் அமெரிக்கா நடத்திய இத்தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்தாக்குதலில் கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து செயல்பட்ட 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments