ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: காசு கொடுத்தால் வாங்குவோம் என கொந்தளிக்கும் மக்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆர்கே நகரில் நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்தது அப்பகுதி மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வருகின்ற 12-ம் திகதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, வருமானவரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், பணப்பட்டுவாடா செய்ததற்கான முறையான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, அத்தொகுதி தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தல் ரத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியது இதோ,

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments