மதுக்கடையை அகற்ற போராடிய பெண்ணை கொடூரமாக தாக்கிய பொலிஸ்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் திருப்பூர் அருகே மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய பெண்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் வெறித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களின் போராட்டம் மாநிலம் முழுவதும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை முதலே அவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தும் கலையாததால் பொலிசார் தடியடி நடத்தினர்.

இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வெறித்தனமாக தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே சாளாபுரத்தில் நடந்த தடியடிக்கு எதிர்க் கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments