பேஸ்புக் மூலம் பாலியல் துன்புறுத்தல்: அதிரடிகாட்டிய பெண் பத்திரிகையாளர்

Report Print Arbin Arbin in இந்தியா

பேஸ்புக் மூலம் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளால் தொல்லை தந்து வந்த ஆசாமியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட காரணமானார் பெண் பத்திரிகையாளர் ரானா அயூப்.

இந்தியாவில் புலனாய்வு இதழியலில் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர் ரானா அயூப். இவர் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்த பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டுவந்தவர்.

மட்டுமின்றி 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதலமைச்சரின் பங்கு, மற்றும் அந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்கள் என இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த அப்போதைய குஜராத் உள்விவகாரத்துறை அமைச்சர் அமித்ஷா கைதாவதற்கும் ரானா அயூப் முக்கிய பங்காற்றினார்.

மேலும் குஜராத் மாநிலத்தில் தலைமறைவாக சென்று நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக ஆதாரம் திரட்டிய நிகழ்வுகளை புத்தகமாக தொகுத்து குஜராத் கோப்புகள் என்ற பெயரில் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

இதனாலையே இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவாளர்களால் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் இவரது பேஸ்புக் மெசஞ்ஜரில் நபர் ஒருவர் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இப்பிரச்னையை சாதாரணமாக விடாமல் அந்த நபரின் பேஸ்புக் விவரங்களையும், அவர் அனுப்பிய தகாத வார்த்தைகளையும் படமெடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ரானா அயூப்.

ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பின்ஸி லால் என்ற நபர்தான் பத்திரிகையாளர் ரானா அயூபை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்தவர்.

இதனிடையே அயூபின் டுவிட்டர் பதிவினை பார்த்த பின்ஸி லால் பணிபுரியும் நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

மட்டுமின்றி பின்ஸி லாலின் விசா முடக்கப்பட்டு அவரை நாட்டைவிட்டே வெளியேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் குறித்த நிறுவனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு நபர் இம்மாதிரியான மோசமான செயல்களில் ஈடுபட்டதற்காக ரானா அயூபிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு இம்மாதிரியான நடவடிக்கைகள் தேவை எனவும் இதை பல நாடுகளும் பின்பற்ற வேண்டுமெனவும் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments