சமக தலைவர் சரத்குமார் வீட்டில் பொலிசார் குவிப்பு: கைது?

Report Print Arbin Arbin in இந்தியா

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டில், வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 7 -ம் திகதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீட்டில் வருமான வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

விஜயபாஸ்கரின் சொந்த ஊரிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சரத்குமார், விஜயபாஸ்கர், கீதாலட்சுமி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் வருமானவரித்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, சென்னை தி.நகரில் உள்ள நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் சரத்குமார் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, சரத்குமாரின் கொட்டிவாக்கம் இல்லத்தின் வெளியே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments