ஜெ. கைரேகை பதிவு செய்ய லஞ்சம் வாங்கினேனா? மருத்துவர் பாலாஜி விளக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் வாங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று அரசு மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி இடைத் தேர்தலையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பெறுவதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து அரசு மருத்துவர் பாலாஜி ரூ.5 லட்சம் பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் வாங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவர் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத் துறை அமைச்சர் தனது உதவியாளர் மூலமாக் எனக்கு ரூ.5 லட்சம் கொடுத்து அனுப்பியதாகவும் அதனை ஹோட்டல் செலவுக்கு பயன்படுத்தியதாகவும் நேற்றும் இன்றும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊடகங்களில் வெளியானது ஆதரமற்ற, போலியான செய்தி என்பதை தெளிவு படுத்துகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக எந்த பத்திரிகைக்கோ அல்லது காட்சி ஊடகத்திற்கோ பேட்டி கொடுக்கவில்லை.

ஊதியமாகவோ அல்லது மற்ற வகையிலும் நான் எந்த வொரு பணத்தையும் பெறவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன் என்றுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு 3 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர் பாலாஜி இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments