130 ரூபாய்க்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் பலி!

Report Print Thayalan Thayalan in இந்தியா

ஹைதராபாத் உணவகம் ஒன்றில், உபரியாகக் கிடைத்த பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் ஊழியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஹைதராபாத், காஞ்சன்பக் நகரின் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜூ மற்றும் கமலேஷ் ஆகிய இருவரும் உணவகத்துக்கு வருபவர்கள் தரும் உபரிப் பணத்தைப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். கடந்த ஞாயிறு கிடைத்த உபரிப் பணத்தில் 130 ரூபாயை ராஜூ தனக்குத் தரவில்லை என கமலேஷ் சந்தேகப்பட்டார்.

திங்களன்று காலை உணவகத்துக்கு வந்த ராஜூவிடம், தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தருமாறு கமலேஷ் கேட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட சண்டையில் கமலேஷ், ராஜூவைக் கீழே தள்ளினார். நிலை தடுமாறிக் கீழே விழுந்த ராஜூவின் தலை கல்லில் மோதியதால் அவ்விடத்திலேயே அவர் மரணமானார்.

இதையறிந்த உணவகத்தின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் கமலேஷைக் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments