இந்தியப் படகுகளை சிறைப்பிடிக்க வந்த பாக். படகுக்கு நேர்ந்த கதி!

Report Print Thayalan Thayalan in இந்தியா
இந்தியப் படகுகளை சிறைப்பிடிக்க வந்த பாக். படகுக்கு நேர்ந்த கதி!

இந்திய மீன்பிடிப் படகுகளைச் சிறைப்பிடிக்க முயற்சித்த பாகிஸ்தான் படகொன்றின் மீது, இந்திய ட்ரோலர் ரக மீன்பிடிப் படகு மோதியதில் மூவர் கொல்லப்பட்டனர். இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவரைக் காணவில்லை. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குஜராத் கடற்பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான பன்னிரண்டு மீன்பிடிப் படகுகள் நிலைகொண்டிருந்தன. அந்தப் படகுகளை கராச்சிக்கு இழுத்துச் செல்லும் நோக்கில் பாகிஸ்தான் பாதுகாப்பு முகவரகப் படகுகள் சில இந்தியப் படகுகளைச் சுற்றிவளைத்தன.

அதன்போது, இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகொன்று மோதியதில் பாகிஸ்தான் கமாண்டோக்கள் மூவர் பலியானதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இருவரை இந்திய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

விபத்து குறித்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விபத்துப் பகுதிக்குச் சென்ற இந்திய கடற்படையின் ‘அரிஞ்சே’ என்ற படகு, உயிரிழந்த நிலையில் மூவரையும் உயிருடன் இருவரையும் மீட்டெடுத்தது. தம்முடன் வந்த மற்றொருவரைக் காணவில்லை என காப்பாற்றப்பட்ட கமாண்டோக்கள் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரையும் மற்றும் உயிரற்ற மூவரின் உடல்களையும் மேற்பட முகவரகத்திடமே இந்தியக் கடற்படை கையளித்தது.

காணாமல் போயுள்ளவரைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments