பிரபல நடிகை ராதிகா நிறுவனத்தில் திடீர் ஐடி ரெய்டு

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 7- ஆம் திகதி பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பெரும் தொகை ஒன்றை சரத்குமார் வாங்கியதால், இந்த அதிரடி சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வுத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று அங்கு சென்ற சரத்குமாரிடம் நான்கு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரபரப்பு முடிவடைவதற்குள் இன்று பிற்பகல் சரத்குமாரின் மனைவியும்,நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தி நகரில் உள்ள ராடன் மீடியா நிறுவனத்தில் சோதனை நடைபெற்றுவருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments