16 அமைச்சர்கள் கைது? தமிழகத்தில் ஆட்சி கலைகிறது

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தின் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.

ஆனால் அப்பகுதியில் முறைகேடான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் திகதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதுமட்டுமின்றி சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமாரின் வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மீட்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை திகதி குறிப்பிடாமல் ரத்து செய்தது.

மேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கு எதிரான ஆவணங்களும் இதில் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரை தங்கள் அலுவலகத்துக்கு வர வழைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். நடிகர் சரத்குமாரிடம் நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது.

இந்த விசாரணையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறையினரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், இதனால் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் இதில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியது.

இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது, எந்த நேரத்திலும் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் கிடைத்த ஆதரங்களைக் கொண்டு ஆளும் கட்சியில் 10 முதல் 16 அமைச்சர்கள் கைது செய்யப்போவதாகவும், அதைத் தொடர்ந்து இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்றும் விஜயபாஸ்கர் அளிக்கு வாக்குமூலத்தை வைத்து தமிழக அரசை கவிழ்க்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படுவது குறித்து எந்த ஒரு தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments