கொலை முயற்சியில் 7 முறை உயிர் தப்பியவர் வெட்டிக்கொலை

Report Print Arbin Arbin in இந்தியா

ஏழு முறை கொலை முயற்சியில் இருந்து தப்பித்தவர் எட்டாவது முறையாக கொலையுண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள வேம்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். மதுரை மாவட்டம் கீழவடத்தூரில், நேற்று டாடா சுமோ காரில் வந்த 6 பேர் கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை வேம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இவர் பதவி வகித்துள்ளார். 2010ஆம் ஆண்டு இவரது தம்பி முத்துகிருஷ்ணனை, புதுக்குளத்தை சேர்ந்த பிரபு தரப்பு கொலை செய்ய, அதற்கு பதிலாக கருப்பு என்பவரை முருகன் தரப்பு கொன்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில், பழிக்கு பழியாக தற்போது முருகன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். 7 முறை கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய முருகன், 8ஆவது முயற்சியில் வெட்டிச் சாய்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஆயுதம் வைத்துக் கொள்ள அனுமதி கோரி முருகன் முயற்சித்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சாதிய அடக்குமுறையை முருகன் எதிர்த்ததாகவும், இதனால் இவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments