மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க தமிழகம் வந்த டென்மார்க் பாட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா

டென்மார்க்கை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மூதாதையர்களை பார்ப்பற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 1750ம் ஆண்டுகளில் டென்மார்க் நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வந்தனர்.

அவர்களில் ஒருவர்தான் ஓட்டோ கிறிஸ்டியன் பைன்ஸ்டிக்கர்ஸ்.

இந்நிலையில் இவர் குடும்பத்தின் 8வது தலைமுறையை சேர்ந்த பியாகிட் என்ற 75 வயது மூதாட்டி தன்னுடைய மூதாதையர்கள் தரங்கம்பாடியில் வாழ்ந்த பகுதியை பார்க்க நேற்று தரங்கம்பாடி வந்துள்ளார்.

1800ம் ஆண்டு தயாரித்த வரைபடத்தின் உதவியுடன் தன்னுடைய மூதாதையர் ஓட்டோகிறிஸ்டியன் பைன்ஸ்டிக்கர்ஸ் வாழ்ந்த பகுதியை கண்டுபிடித்துள்ளார்.

தோட்டமாக இருந்த பகுதிகள் அனைத்தும் தற்போது குடியிருப்பாக மாறியுள்ளது.

இதுகுறித்து பியாகிட் கூறியதாவது, எங்களின் மூதாதையர்கள் தரங்கம்பாடியில் செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள் என்பதை நாங்கள் கேள்விபட்டுள்ளோம்.

அந்த குடும்பத்தின் 8வது தலைமுறையை சேர்ந்த நான் தரங்கம்பாடியில் அவர்கள் வாழ்ந்த பகுதியை பார்க்க வந்தேன்.

இந்த இடத்தை பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களும் தரங்கம்பாடி வர ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments