அமைச்சர் விஜயபாஸ்கர் கைது? எடப்பாடிக்கு கடும் நெருக்கடி! வெளியான பரபரப்பு தகவல்

Report Print Basu in இந்தியா

ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐக்கும் அமலாக்கப் பிரிவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 7ம் திகதி, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்களும், பணமும் கிடைத்துள்ளது.

இது குறித்து விளக்கமளிக்க சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகினார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விஜயபாஸ்கர் வருமான வரித்துறையினருக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காததால், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பிவிசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐக்கும் அமலாக்கப் பிரிவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளனர்.

இதனால் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஓரிரு நாளில் விஜயபாஸ்கரை கைது செய்து விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் பதவி பறிபோகும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments