ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்தது உண்மைதான்: ஒப்புக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்தது உண்மைதான் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு, அப்பகுதி மக்களுக்கு தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 (85 சதவீதம்) வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை வருமானவரித் துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து, துணை இயக்குநர் ராஜமாணிக்கம் முன்னிலையில் ஆஜரானார்.

விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், பணப்பட்டுவாடாவுக்கான முழுப்பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் சில அமைச்சர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments