ஆர்.கே நகர் தேர்தல் ரத்து: தொகுதி மக்களுக்கு தினகரன் தரப்போகும் அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகர் தேர்தலில் தான் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற போவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைதேர்தல் வரும் 12ம் திகதி நடைபெறுவதாக இருந்தது.

இந்த சமயத்தில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக நேற்று அறிவித்தது.

இதையடுத்து ஆர்.கே நகர் அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஆர்.கே நகரில் நான் வெற்றி பெறுவேன் என தெரிந்து தான் பா.ஜ.க தேர்தலை நிறுத்தியுள்ளது.

பொதுவாக தேர்தலில் ஜெயித்த பின்னர் தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

ஆனால் தேர்தல் நின்றுள்ள இந்த சமயத்தில், தேர்தலுக்கு முன்னதாகவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றவுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments