தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு

Report Print Santhan in இந்தியா

தமிழக விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் 28-வது நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.

விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வைக்க இருந்தனர். ஆனால் நரேந்திர மோடி நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விவசாயிகள், நிர்வாணப் போராட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு ஆடைகளை களைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். டெல்லி காவல்துறை அவர்களை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments