இது வாட்ஸ் அப் குழந்தை! ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மாணவன்

Report Print Meenakshi in இந்தியா

இந்தியாவில் 24 வயதான மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று(7.04.2017) அகமதாபாத்- புரி வரை செல்லும் விரைவு இரயிலில் நாக்பூர் அரசு மருத்துவகல்லூரி மாணவர் விபின் கட்ஷே பயணித்துள்ளார்.

அதே இரயிலில் சித்திரலேகா என்னும் கர்ப்பிணியும் அவரது கணவரும் பயணித்துள்ளனர்.

ரயில் சென்று கொண்டிருந்த போது சித்திரலேகாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது, என்னசெய்வதென்று தெரியாமல் சித்திரலேகாவின் உறவினர்கள் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

உடனிருந்த பெண்கள் உதவிபுரிய கட்ஷே அனுபவமுள்ள மருத்துவர்களின் வழிகாட்டலுடன் பிரசவம் பார்த்துள்ளார்.

இதுகுறித்து கட்ஷே கூறுகையில், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் டிக்கெட் பரிசோதகர் முதலில் மருத்துவர்கள் யாராவது உள்ளனரா என கேட்டபோது எனக்கு அனுபவம் இல்லாததால் பதில் கூறவில்லை.

மறுபடியும் மருத்துவர் உள்ளனரா என தேடினர், பின்னரே நான் உதவி செய்வதாக கூறினேன்என்று கூறியுள்ளார்.

மேலும், சித்திரலேகாவிற்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டதால் குளிர்ந்த தண்ணீர் போத்தல்களை வைத்து அவரின் இரத்தபோக்கினை கட்டுப்படுத்தி உள்ளார்.

குழந்தையின் தோள்பட்டையினை வெளியில் எடுக்க முடியாதபோது வாட்ஸ் அப் மூலமாக குழந்தையின் நிலையினை புகைப்படம் எடுத்து மற்ற மருத்துவர்களுக்கு அனுப்பி ஆலோசனை கேட்டு பிரசவம் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் இரயில் நாக்பூர் நிலையத்திற்கு சென்றவுடன் அங்கு குழந்தைக்கும் தாய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments