அடக்கொடுமையே: கொலை செய்வதற்கு இப்படி ஒரு காரணமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

தனது காதலி எப்போதும் போனில் பேசிக்கொண்டிருப்பதால் கோபமடைந்த காதலன், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த ஆயிஷா(18) மற்றும் மோரே ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஆயிஷா எப்போதும் போன் பேசியவாறு இருந்துள்ளார். மோரே போன் செய்தாலும் பிசியாகவே இருந்துள்ளார்.

யாருடன் பேசுகிறாய் என்று கேட்டால், எனது வீட்டில் உள்ளவர்களுடன் பேசுகிறேன் எனக்கூறியுள்ளார். ஆயிஷாவின் இந்த செயல் மோரேவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று, ஆயிஷாவுக்கு மோரே போன் செய்துள்ளார். அப்போது அவர் பிசியாக இருந்துள்ளார். இதனால், ஆயிஷா இருந்த இடத்திற்கு தேடிச்சென்றுள்ளார்.

மோரேவிடம், நான் எனது தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், பிறகு உன்னோடு பேசுகிறேன் என சைகையில் கூறியுள்ளார். இதனைக் கேட்காத மோரே, உனது கைப்பேசியை காட்டு என கூறியுள்ளார்.

இதற்கு ஆயிஷா மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த மோரே மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆயிஷாவின் கழுத்தை அறுத்ததில், நிலைகுலைந்த ஆயிஷா, ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தார்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்தார்.

இந்நிலையில், கத்தியுடன் நின்றிருந்த மோரேவை மடக்கிப் பிடித்த அக்கம்பக்கத்தினர், பொலிசில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments