விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஜேர்மன் வாழ் தமிழர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கூடுதல் வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 27 வது நாளாக இந்த போராட்டத்தை, மொட்டையடித்தும், எலியை சாப்பிட்டும் என பல்வேறு நூதன முறையில் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் இந்த போராட்டத்திற்கு நடிகர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜேர்மன் வாழ் தமிழர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியின் பிராங்க்ஃபட் நகரில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கு வாழும் தமிழர்கள், கையில் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் நதிநீர் இணைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடுதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments