பிளான் பண்ணி வருமான வரித்துறையினரிடம் சிக்கவைக்கப்பட்ட தினகரன்! யார் செய்தது?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சில சிக்கியதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கட்சியின் சார்பில் போட்டியிடும் தினகரன் வெற்றிக்காக ஒவ்வொரு அமைச்சரும் செலவிட வேண்டிய தொகை மற்றும் கவர் செய்ய வேண்டிய வாக்காளர்கள் பட்டியலை, வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

அந்த பட்டியல் வெளியாகி அரசியல் வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக 12 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை வருமானவரித்துறையினர் கவனித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட அந்த பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி என அமைச்சர்கள் பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

என்னதான் தேர்தல் செலவுக்கான விவரப் பட்டியல் என்றாலும், தேர்தல் நேரத்தில் அந்தப் பட்டியலை வருமான வரித் துறையினர் கைப்பற்றும் விதமாக அதை பத்திரப்படுத்தாமல் வைத்திருந்தது ஏன் என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

அதனால் சிலர் திட்டமிட்டே இந்த வேலையை செய்திருக்கின்றனர் என்று அதிமுக வட்டாரங்கள் இடையே கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments