ஆர்கே நகர் தேர்தல்...கிடைத்தது ஆதாரம்: விரைவில் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆர்கே நகர் தேர்தலை தள்ளி வைப்பதற்கான முடிவு அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்கே நகரில் தினகரன் அணியின் மக்களுக்கு பணத்தினை வாரி இறைப்பதாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அதன் மூலம் ஆர்.கே. நகரில் பண வினியோகம் பெரிய அளவில் நடந்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வருருமான வரித்துறையும், ஆர்.கே. நகர் தேர்தல் பார்வையாளர்களும் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆர்கே தகர் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் கூட்டம் நடத்தி கொண்டிருக்கிறது.

கூட்டம் முடிந்ததும் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து ஒரு முக்கிய முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments