கலவர பூமியானது ஆர்.கே.நகர்! 2 பேர் மண்டை உடைப்பு...மருத்துவமைனையில் எம்எல்ஏ

Report Print Basu in இந்தியா

ஆர்.கே.நகரில் தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஓபிஎஸ் அணியும், டிடிவி தினகரன் அணியும் மோதி கொண்டதில் அத்தொகுதி கலவர பூமியாக மாறியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் இரு தரப்பின்ரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

இதனால் ஆர்.கே.நகரின் பல பகுதிகளில் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேதாஜி நகர் 3வது தெருவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மாபா பாண்டியராஜன் தலைமையிலான ஒபிஎஸ் அணியினர் ஜெயலலிதாக சவப்பெட்டியை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் ஓ.பி.எஸை கைது செய்யக் கோரி தினகரன் தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு பக்கம் ஓ.பி.எஸ் தரப்பினர் பிரச்சனை செய்ய ஆர்.கே.நகர் கலவரம் வெடித்தது.

மோதலில் டி.டி.வி. தினகரனின் அணியைச் சேர்ந்த மேலூர் எம்.எல்.ஏ.க்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதயில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments