கருணாநிதியை வீட்டிற்குள் பூட்டி வைத்த ஸ்டாலின்?

Report Print Santhan in இந்தியா

கருணாநிதியை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு ஸ்டாலின் அரசியல் செய்வதாக அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழகத்தின் சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தீவிர பிராச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் ஓபிஎஸ்.ஸையும் இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் கட்சி சார்பில் நிற்கும் மதுசூதனன் கூறுகையில், ஸ்டாலினின் குற்றச்சாட்டு தேவையில்லாத குற்றச்சாட்டு, அப்படி என்றால் தனக்கும் ஒரு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

அதில், கருணாநிதியை அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதை நான் சொல்லவில்லை. அவரது சகோதரர் அழகிரிதான் சொல்கிறார். இதற்கு ஸ்டாலின் சொல்லும் பதில் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்.

மைல் கற்களில் இந்தியில் பெயர் எழுதுவதற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது எல்லாம் நாடகம். கருணாநிதி குடும்பத்தில் இந்தி தெரியாதவர் யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments