அந்தர் பல்டியடித்த சரத்குமார்: டிடிவி தினகரனை சந்தித்து நேரில் ஆதரவு

Report Print Raju Raju in இந்தியா

நடிகரும், ச.ம.க கட்சியின் தலைவருமான சரத்குமார் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆர்.கே நகர் தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்து கொண்டார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் ஜெயலலிதா இருந்த வரை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார்.

அவர் இறப்புக்கு பின்னர் சசிகலா தரப்பை விரும்பாத அவர் ஓ.பி.எஸ்க்கு தனது ஆதரவு என கூறி வந்தார்.

ஆர்.கே நகரில் அவர் கட்சி சார்பில் நிறுத்திய வேட்பாளர் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

இதனால் சில நாட்கள் அமைதியாக இருந்த சரத்குமார், திடீர் பல்டியாக, தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் தினகரன் இல்லத்துக்கு வந்த அவர் ஆர்.கே நகர் தேர்தலில் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்து கொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments